இல.கணேசன் இல்ல விழா.! செண்டை மேளம் வாசித்து அசத்திய மம்தா பேனர்ஜி.!

மே.வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களின் சகோதரர் அவர்களின் 80வது பிறந்தநாள் விழா, சதாபிஷேக விழாவாக இன்று கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்கு நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சென்னை வந்தடைந்தார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் மம்தா.

இன்று விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு மம்தா வந்திறங்கினார். அவருக்கு செண்டை மேளம் முழங்க நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு வந்த மம்தா செண்டை மேளம் வாசித்து அசத்தினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment