Kamal Haasan and vijay

அரசியலை விளையாட்டா எடுத்துக்கக் கூடாது! விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

By

நடிகர் விஜய் சமீபகாலமாக தனது மக்கள் இயக்கம் சார்பாக சில நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். இதனை வைத்து பார்க்கையில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட அரசியல் குறித்த கேள்விக்கு ‘2026 கப்பு முக்கியம் பிகிலு’ என  சூசகமாக பதில் கூறியிருந்தார்.

   
   

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் விஜய்க்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளர் ஒருவர் சமீபகாலமாக விஜய் அரசியல் பற்றி பேசி வருகிறார். இசை வெளியீட்டு விழாவில் கூட தான் முதலமைச்சரானால் இப்படி செய்வேன் என்று கூட விளையாட்டாக பேசி இருக்கிறார்.

விஜய் இப்படி பேசியதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் ” விஜய் விளையாட்டாக பேசி இருக்கார் என்று நீங்கள் சொன்னீர்கள் ஆனால், அது விளையாட்டாக இருக்க கூடாது என்று தான் நான் நினைக்கிறன். அவர் அதனை விளையாட்டாக சொல்லி இருக்க கூடாது.

அரசியலுக்கு வரும் ஆசை யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால், என்னை பொறுத்தவரை அதற்கான தகுதிகளை வளர்த்து கொண்டு வந்தால் இன்னும் சந்தோசம் தான்” என கூறியுள்ளார். நேற்று கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் – கமல் இருவரும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023