நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • பொங்கலை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம். 
  • பட்டாசு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரம். 

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். சமீப காலமாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை கொண்டு செல்வதுடன், நேர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று பொங்கலை முன்னிட்டு, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படமும் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படம் சென்னையில் மட்டும் நேற்று, ரூ.51 லட்சம் வசூல் செய்துள்ளது.

இதற்கு முன் வெளியான அசுரன் திரைப்படம், சென்னையில் மட்டும், முதல் நாளில் ரூ.52 லட்சம் வசூல் செய்துள்ளது. அசுரன் படத்துடன் ஒப்பிடும்போது, பட்டாஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறைவாகத்தான் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.