மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்.!

Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு அருகில் இருந்த வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

READ MORE – வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்! 

நேற்றிலிருந்தே நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய வேண்டி, திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை அப்போலோவில் மனைவி ஷாலினியுடன் அவர் நடந்து செல்லும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

READ MORE – தோளில் கைபோட்டு தப்பா நடந்துகிட்டாங்க! பிக் பாஸ் நடிகை சொன்ன பகீர் தகவல்!

இந்த வீடியோவை அவரின் ரசிகர்கள் பகிர்ந்து நலம்பெற பிரார்த்தனை செய்கின்றனர். ஆனால், அந்த வீடியோ எப்போது எடுத்து என தெரியவில்லை. இதற்கிடையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்திகள் பரவியது. ஆனால், அவர் வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டார் என அஜித்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

READ MORE – அந்த படத்திற்காக விஜயகாந்த் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்? குலைநடுங்க வைத்த பிரபலம் சொன்ன கதை!

அவர் தற்பொழுது ஒரு வாரம் ஓய்வுக்கு பின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment