சிறுமியை வேலைக்கு அமர்த்திய பானுப்ரியா மீது நடவடிக்கை…!!

சிறுமியை வேலைக்கு அமர்த்திய பானுப்ரியா மீது நடவடிக்கை…!!

Default Image

வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து கொடுமை செய்ததாக நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தைகள் நல அமைப்பு சார்பில் நலவாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தனது 14 வயது மகள் பானுப்பிரியா வீட்டில் பணியாற்றியபோது, அவரை பானுப்ரியா கொடுமைப்படுத்தியதாகவும், அவரது சகோதரர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் சிறுமியின் தாயார் பிரபாவதி, ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதேவேளையில் சிறுமி, நகை, பணம், செல்போன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பொருட்களை திருடி விட்டதாக சென்னை காவல்நிலையத்தில் பானுப்ரியா புகார் அளித்துள்ளார்.

சிறுமியை வேலைக்கு வைத்தது தொடர்பாகவும் பானுப்ரியா மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், 18 வயதுக்கு குறைந்த நபரை வேலைக்கு வைத்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக தொழிலாளர் நலவாரியத்திற்கு குழந்தைகள் நல அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

Join our channel google news Youtube