ஆளும் கட்சியினரின் அராஜகம்….! பிரச்சனைகள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும்…!!! பிரபல நடிகை அதிரடி…!!!

சர்க்கார் படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிறது. இரண்டு நாட்களிலேயே படத்திற்கு பிரச்சனை எழுந்துவிட்டது. ஆளும் கட்சியினர் தங்களது அராஜகத்தை காட்ட துவங்கியுள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் தனி இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ஜெயலலிதா மற்றும் அரசின் இலவச பொருட்களை விமர்சிப்பதாக சொல்லி எதிர்ப்பு காட்டி போராட்டம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது காமெடி நடிகை வித்யூலேகா ராமன் சர்க்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், சொந்த வெறுப்புகளை தாண்டி மக்கள் எப்போது படங்களை படமாக பார்க்க போகிறார்கள். எத்தனை பிரச்சனை வந்தாலும் அது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என்று கூறியுள்ளார்.

source : tamil.cinebar.in