தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம்!

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 197 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது. அங்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு இந்த வைரஸ் தாக்கம் உள்ள நிலையில், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் சிலருக்கு தொற்று உறுதியானதால், தொலைபேசி எண்களை பெற்று உறுதிப்படுத்திய பிறகே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.