அதிகரிக்கும் கொரோனா.! பெங்களூருவில் ஒரு வாரம் முழு ஊரடங்கு .!

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூருவில்  ஜூலை 14 -ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.கொரோனாவால்  இதுவரை கர்நாடகாவில் 33418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13836 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 543 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

author avatar
murugan