விராட் கோலி காலில் விழுந்த ரசிகர்! கடுமையாக தாக்கிய பாதுகாவலர்கள் ஷாக்கிங் வீடியோ..

Virat Kohli  Fan : விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்த போட்டியின் போது விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் வந்து விராட் கோலியின் கால்களில் விழுந்தார். விழுந்த ரசிகரை எழுப்பி விராட் கோலி கட்டியணைத்தார்.  இந்த வீடியோ அந்த சமயம் வெளியாகி வைரலாக பரவி வந்த நிலையில், பலரும் ரசிகரிடம் விராட் கோலி நடந்து கொண்ட விதத்தை பாராட்டி இருதார்கள்.

ஆனால், அந்த ரசிகர் விராட் கோலியை சந்தித்த பிறகு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாதுகாவலர்களை மீறி அந்த ரசிகர் மைதானத்திற்குள் சென்று கோலியின் காலில் விழுந்ததால் அந்த ரசிகர் கோலியை சந்தித்த பிறகு பாதுகாவலர்கள் மைதானத்திற்கு வெளியே இழுத்து சென்று கடுமையாக தாக்கினார்கள்.

அந்த ரசிகர் பாதுகாவலர்கள் அடித்த வலியில் தாங்க முடியாமல் கதறி அழுகிறார். பிறகு அங்கு இருந்த ஒருவர் பாதுகாவலர்களை அடிக்கவேண்டாம் என்று கூறிவிட்டு ரசிகரை வெளியே அழைத்து சென்றாரா. விராட் கோலி ரசிகரை இரண்டு பாதுகாவலர்கள் தாக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒருவரை தாக்கும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.