ஒரே நேரத்தில் 25 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் – பேஸ்புக் காதலால் நேர்ந்த கொடூரம்!

பேஸ்புக் மூலமாக பழகிய காதலனை நம்பி சென்ற பெண்ணை 25 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ள நிலையில், 25 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முகநூல் மூலமாக நண்பர்களாக அறிமுகமாகி நேரில் சந்தித்து கொள்ளாமலேயே பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆனால் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சேர்ந்த 22 வயதுடைய பெண்மணியின் பெற்றோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது வசித்து வருகிறார்கள். ஆனால், அந்த பெண் மற்றும் டெல்லியில் தனியாக தங்கி இருந்து வீட்டு வேலை பார்த்து வருகிறாராம். இந்நிலையில் கடந்த மாதம் ஹரியானாவை சேர்ந்த 23 வயதுடைய சாகர் எனும் நபருடன் பேஸ்புக் மூலமாக இந்த பெண்ணிற்கு நட்பு உருவாகி உள்ளது. அதன் பின்பாக நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சாகர் தன்னுடைய பெற்றோருக்கு அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி நேரில் வருமாறு அழைத்துள்ளார்.

எனவே சாகரின் கோரிக்கையை ஏற்று அந்த பெண்ணும் கடந்த மே மாதம் 1ஆம் தேதி தன்னுடைய காதலனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அவருடைய காதலனின் பெற்றோருக்கு அந்த பெண்ணை அறிமுகம் செய்து வைக்காமல் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு சாகரின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பகுதியில் அமர்ந்து இருந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்பதாக மறுநாளும் இரும்பு வியாபாரம் பார்க்கும்  ஆகாஷின் என்பவர் ஐந்து பேருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மொத்தம் 25 பேர் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து பதர்பூர் அருகே வீசி சென்றுள்ளனர். அதன்பின் அந்தப் பெண் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பத்து நாட்கள் வரை எழுந்திருக்க முடியாமல் இருந்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி காவல்நிலையம் சென்ற பெண் 25 பேர் மீதும் புகார் அளித்ததுடன் நடந்த சம்பவங்களையும் எடுத்து கூறியுள்ளார். இதனையடுத்து அந்த 25 பேர் மீதும் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் முக்கிய நபரான சாகரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சாகரின் நண்பர்கள் சிலரையும் தற்பொழுது தேடிவருகின்றனர்.

author avatar
Rebekal