டெல்டா மாவட்டங்கள் தொடர் புறக்கணிப்பு.! அனைத்து கட்சியினர் ரயில் மறியல்.!

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைமையில் இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட 3 இடங்களிலும், நாகையில் 2 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாகவும், குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரயில் நிற்காமல் செல்கிறது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவாரூர் , நாகை மாவட்டங்களில் விரைவுரயில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட 32 கோரிக்கைகளை முன்வைத்து, இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட 3 இடங்களிலும், நாகையில் 2 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த ரயில் மறியல் போராட்டமானது, மத்திய அரசை எதிர்த்து, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைமையில் நடைபெற்றது.  இந்த ரயில் மறியல் போராட்டத்தால் திருவாரூர், நாகை ரயில்தடம் வழியாக செல்லும் ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment