திராவிடக் கொள்கைகளில் தோய்ந்து போன எனக்கு, முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு டாக்.ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! திராவிடக் கொள்கைகளில் தோய்ந்து போன எனக்கு, முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்! இதன் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும்! பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment