சந்திரயானை நினைவூட்டிய பிசிசிஐ! ஐபிஎல் திருவிழாவில் மெய்சிலிர்க்கும் காட்சி..!

IPL 2024: ஐபிஎல் 2024 தொடக்க விழா பல நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளால் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.

ஐபிஎல் 17ஆவது சீசன் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. தொடக்க விழாவை முன்னிட்டு, பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அந்த வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிகளை பாராட்டும் வகையில், ஐபிஎல் 2024 தொடக்க விழாவின் போது, சந்திரயான் 3 தரையிறங்கும் சிறப்பு கிராஃபிக்கைக் காட்டி BCCI (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) சந்திரயான் 3 பணிக்கு நினைவு கூர்ந்தது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024-ன் தொடக்க ஆட்டத்தில் நேற்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதியது. இதில், நடப்பு ஐ.பி.எல் சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியது.

IPL CskvsRcb Toss [ file image]
IPL CskvsRcb Toss file image
நேற்று நடைபெற்ற முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை சென்னை பதிவு செய்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.