அதிர்ச்சி சம்பவம்…மைதனாத்தில் புதைக்கபட்ட குண்டு வெடிப்பு – 12 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி:

அதனை உறுதி செய்யும் வகையில்,ஹெராட் நகரின் PD 12 இல் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, 25 பேர் காயமடைந்தனர் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும்,காயமடைந்தவர்கள் மாகாண தலைநகர் ஹெராட்டில் உள்ள பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மைதானத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டு:

மேலும்,வெடிபொருட்கள் விளையாட்டு மைதானத்தில் முன்னதாக புதைக்கப்பட்டிருந்ததாகவும்,அந்த மைதனாத்தில் இளைஞர்கள் விளையாடியதால் குண்டு வெடித்துள்ளதாகவும் TOLO செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தலிபான்கள் – மோசமான தாக்குதல்கள் :

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதில் இருந்து, நாடு முழுவதும் தொடர்ந்து மோசமான தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.அந்த வகையில்,இதற்கு முன்னதாக, ஜனவரி மாதம்,ஹெராட் நகரில் நடந்த வெடி விபத்தில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில்,ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் குண்டி வெடிப்பு நிகழ்ந்துள்ளது.அதன்படி,இறந்தவர்களில் குறைந்தது நான்கு பெண்களும் அடங்குவர் என கூறப்படுகிறது.