கைது செய்யப்பட்ட மாணவி சிறையில் 2ஆம் நாள் உண்ணாவிரதம்…

 
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் தப்பாட்டையை அடித்துக்கொண்டு இயற்கை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி  மற்றும் 5 பேர் கேரளாவுக்கு நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்) காவலர் ஸ்டாலின், அங்கு வந்தார். அவர், தன்னுடைய செல்போனில் அவர்களை போட்டோ பிடித்துள்ளார். இதற்கு வளர்மதியுடன் வந்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதன்பிறகு காவலர் ஸ்டாலின் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து, வளர்மதி மற்றும் அவருடன் இருந்த 5 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி, 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.அவர்களை அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து வளர்மதி உள்ளிட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.வளர்மதி பெண்கள் சிறையில் இந்த கைது நடவடிக்கைக்கு காரணமான காவலர் ஸ்டாலின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தை சிறையில் தொடங்கினார்.நேற்றே சிறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.ஆனாலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
 
DINASUVADU 
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment