கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – ஆளுநர் தமிழிசை

கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை பேட்டி. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ள சாராய விற்பனையை ஒடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,  கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  தமிழிசை, கள்ளச்சாராயம் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; புதுச்சேரியில் போதைப்பெருள் மற்றும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; எந்த பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வந்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.