37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

தமிழகத்தில் விஷ சாராய உயிரிழப்பு 21-ஆக உயர்வு! தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

விஷச்சாராயத்தை குடித்த ஜம்பு, சங்கர் ஆகிய இருவரும் சிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தமிழகத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இதில், செங்கல்பட்டில் சித்தாமூர் அருகே விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. விஷச்சாராயத்தை குடித்த ஜம்பு, சங்கர் சிச்சை பலனின்றி செங்கல்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்படி, இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்யவும் தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.