நாங்கள் தைரியமாக கூறுகிறோம்… அவர்களால் கூற முடியுமா.? தமிழக பாஜகவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி.!

திமுக உறுப்பினர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர் என்று நாங்கள் தைரியமாக கூறுவோம். அதே போல பாஜகவால் கூற முடியுமா.? – தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஈரோட்டில் செய்தியாளர்கள் அளித்தார். அப்போது அவரிடம் தமிழக பாஜக பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்பாஜக மீதான தனது விமர்சனத்தையும், தமிழக பாஜக மீது பல்வேறு கேள்விகளையும் கொடுத்தார்.

அவர் கூறுகையில், என்னிடம் பாஜக பற்றியும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றியும் கேட்க வருகிறீர்கள், என்றால், முதலில் அவர்களிடம் தமிழக பாஜக உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை என்பதை தெரிந்து கேட்டு சொல்லுங்கள். அதேபோல, நாங்கள் தைரியமாக சொல்லுவோம். திமுக உறுப்பினர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர் என்று நாங்கள் கூறுவோம். அதேபோல் அவர்களால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து தான் நின்றது என்று நினைக்கிறேன். அப்போது, அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல், தமிழக முழுவதும் அவர்களிடம் எத்தனை தேர்தல் பூத் கமிட்டி அமைத்து, அதில் எத்தனை செயல்பாட்டில் இருக்கிறது என்பதையும் கேட்டு சொல்லுங்கள். இதையெல்லாம் தெரிந்த பிறகு நான் பதில் கூறுகிறேன் என்றும், நோட்டாவுக்கு கீழே உள்ளவர்கள் பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். என்று தனது விமர்சனத்தை முன்வைத்து விட்டு சென்றார்.

மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்காக முதல்வர் வர வாய்ப்பு இருக்கிறது என்றும், முக்கிய அமைச்சர்கள் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களே விரைவில் அறிவிப்பார்கள் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் குறித்தும் பேசி இருந்தார்.

இறுதியாக செய்தியாளர்கள் அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் பிரச்சனை பற்றி கேட்டபோது, அதற்கு பதில் கூறாமல், மக்கள் தேர்தலை வரவேற்க ஆர்வமாக இருக்கின்றனர் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment