எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால் அதிமுகவை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் – ஆர்.எஸ்.பாரதி

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என ஆர்.எஸ்.பாரதி பேச்சு. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சூரம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆர்.எஸ்.பாரதி பேச்சு 

அப்போது பேசிய அவர், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த நாவலரின் நூற்றாண்டு விழாவிற்கு அதிமுகவினர் எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு ஸ்டாலின் தான் சிலை வைத்தார்.

admk and dmk

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் டெல்லியில் இருக்கும் குரங்கு ஆப்பத்தை பங்குபோடுவதை பார்த்திருப்பார். தனக்கு ஸ்டாலின் தான் மரியாதை கொடுப்பார் என்று, அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment