சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி – கனிமொழி குற்றச்சாட்டு!

சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு என மக்களவையில் எம்பி கனிமொழி குற்றச்சாட்டு.

சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு மிக மிக குறையவாக நிதி ஒதுக்குகிறது என்று திமுக எம்பி கனிமொழி குற்றசாட்டியுள்ளார். தமிழின் பெருமையை பற்றி மட்டும் பிரதமர் மோடி பேசுகிறார், ஆனால், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்துக்கு ரூ.198.98 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், தமிழுக்கு ரூ.11.86 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

மேலும், தமிழ்நாடு ஆளுநர் 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை என்றும் உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல் எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment