தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப்போகிறீர்களா? – கனிமொழி எம்.பி

பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது என மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு.

திமுக எம்.பி கனிமொழி அவர்கள் மக்களவையில் உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்னவானது? தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப்போகிறீர்களா?

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 27 முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துள்ளது; தேர்தல் வாக்குறுதியிலும் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் அந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை, அதற்காக நீங்கள் ஒன்றும் செய்யவில்லை; நீங்கள் மக்களுக்காகவோ, நலிவடைந்தவர்களுக்காகவோ , ஒடுக்கப்பட்டவர்களுக்காகவோ கவலைப்படவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு 

தேசிய அளவில் சமூக, பொருளாதார அடிப்படையிலான சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை வலியுறுத்தி இருக்கிறார்.

இது மக்களின் உண்மை நிலையை கண்டறிய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கு எது தடையாக இருக்கிறது என்று தெரியவில்லை.

பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை; ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது; ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment