சென்னையில் தக்காளி விலை 70 ஆக உயர்வு..!
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 லிருந்து 70 ஆக அதிகரிப்பு
கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனையானது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 லிருந்து 70 ஆக அதிகரிப்பு. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து காணப்படுகிறது.