ஆப்கானிஸ்தானில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் …!

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் பகுதியில் 5.0 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள வடகிழக்கு நகரமாகிய பைசாபாத் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியிலிருந்து சுமார் 106 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்நிலநடுக்கம் 1.37 நீளமும் 150 கிலோ மீட்டர் ஆழமும் கொண்டிருந்ததாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், தற்பொழுது ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதியும் இதே பைசாபாத் பகுதியில் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Rebekal