பக்தர்கள் இன்றி நடைபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்…!

பக்தர்கள் இன்றி நடைபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதுண்டு.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி இந்த விழா நடைபெற்றது. அதே போல இந்த ஆண்டும் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பொது மக்களின் பங்கேற்பு இன்றி திருவிழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை குமார் ராஜா மற்றும் முக்கிய பங்கு நிர்வாகிகள் முன்னிலையில் பனிமய அன்னை திருவிழா கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வானது, உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி திருவிழா நடைபெறுவதால் ஆலயத்தில் சப்பர பவனி, தேர்பவனி நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள  நிலையில், மற்ற நாட்களில், குறிப்பிட்ட அளவு பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.