பாகிஸ்தானில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் – அமெரிக்கா சட்ட வல்லுநர் கருத்து!!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவர்களை கட்டாயம் மதமாற்றம் செய்வதாக அமெரிக்க சட்ட வல்லுநர் பிராட் ஷெர்மன் தகவல்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் அதிகமானோர் சிந்து மாகாணத்தில் வசித்து வருகிறார்கள். இந்த சூழலில் இந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகிறது. இதனால் இந்துக்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரான சட்ட வல்லுநர் பிராட் ஷெர்மன், யு.எஸ்.ஏ.ஐ.டி நிர்வாகி சமந்தா பவர் உடனான காங்கிரஸின் விசாரணையின்போது, இலங்கையில் நடந்த மனித உரிமை பிரச்சினைகளுக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை அழிந்தது என்றும் தெரிவித்தார். அப்போது மேற்கோள்காட்டிய பிராட் ஷெர்மன், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கட்டாயம் மதமாற்றம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அதிபர் பைடன் நிர்வாகம் இந்த விஷயத்தை அறிந்து கொள்ளவும், அந்த மாகாணத்திற்கு அமெரிக்க உதவி கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தினார். அங்கு மக்கள் காணாமல் போகுதல் மற்றும் கட்டாய மதமாற்றங்கள் உட்பட மக்களை கையாளும் அட்டூழியங்கள் காரணமாக அமெரிக்க உதவி பாகிஸ்தானின் சிந்துவை அடையும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, கட்டாய மதமாற்ற வழக்குகளுக்கு எதிராக அமெரிக்கா குரல் எழுப்பியது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 டிசம்பரில் அமெரிக்க வெளியுறவுத்துறை, மத சுதந்திரங்களை மீறியதற்காக பாகிஸ்தானை “ஒரு குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடு” என்று அறிவித்தது.

அப்போது அமெரிக்க ஆணையம் சர்வதேச மத சுதந்திரம் குறித்த கருத்துக்களை வழங்கியிருந்தபோது, சிறுபான்மை இந்து, கிறிஸ்டியன் மற்றும் சீக்கிய சமூகங்கள் கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றுவதற்காக கடத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கட்டாய மத மாற்றம் மோசடிகள் குறித்த அமெரிக்காவின் கூற்றை நிராகரித்து, பாகிஸ்தான் உடனடியாக தனது பதிலை வெளியிட்டது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி, பல வளர்ந்த நாடுகளை விட பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது என்றும் கட்டாய மாற்றங்கள் எதுவும் இங்கு நடைபெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் 13 வயதான கிறிஸ்தவ சிறுமி நயாப் கில் கடத்தப்பட்டு மாற்றப்பட்டதாக அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து, ஐரோப்பாவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குழு மேற்கு தலைநகரங்களில் உள்ள பாகிஸ்தான் குறித்து ஒரு மனுவை சமர்ப்பித்தது.  அதில்,  ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் மத சிறுபான்மையினரைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மாற்றப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் கூட ஒவ்வொரு மாதமும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு மாற்றப்படுவதாகக் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவர்களை கட்டாயம் மதமாற்றம் செய்வதாக அமெரிக்க சட்ட வல்லுநர் பிராட் ஷெர்மன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்