மீண்டும் மோதும் ரஜினி – அஜித்.? இந்த தீபாவளி செம கலெக்சன்.!

இந்த வருடம் தீபாவளி தினத்தில் அண்ணாத்த திரைப்படத்துடன் வலிமை படம் வெளியாகவுள்ளதாக தகவல். 

கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படமுமு ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. தற்போது மீண்டும் ரஜினி படமும் அஜித் படமும் மோத வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 4- ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அதிகார்வப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் கடந்த 2 வருடமாக படமாக்கப்பட்டு வந்த வலிமை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தீபாவளிக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்து வருகிறது.

அப்படி வெளியானால், மீண்டும் ரஜினி படமும் அஜித் படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பேட்ட விஸ்வாசம் திரைப்படங்களை போல பலத்த வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.