நான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், என்னுள் இந்தியா மிக ஆழமாக உள்ளது – கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

நான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், இந்தியா என்னுள் ஆழமாக இருக்கிறது என கூகுள் நிறுவதின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்து வளர்ந்த 49 வயதுடைய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள், தான் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், இந்தியா தனக்குள் மிக ஆழமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நான் என்பதில் இந்தியா ஒரு மிகப்பெரிய பகுதி எனவும் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும், ஆனால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அந்த நாடுகளின் தகவல்களை வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே மிகப்பெரிய அளவில் வரி செலுத்தும் நிறுவனமாக கூகுள் நிறுவனம் உள்ளதாக கூறியுள்ள அவர், ஒவ்வொரு நாட்டிலும் செயல்படக்கூடிய உள்ளூர் சட்டங்களை மதித்து கூகுள் நிறுவனம் செயல்படுவதாகவும், ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கும் இணங்கி கூகுள் நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal