விரைவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்ப்ரே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் – ரஷ்யா!

  • ரஷ்யாவில் குழந்தைகளுக்கான நாசி ஸ்பிரே தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • இந்த தடுப்பூசி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என ரஷ்யாவை சேர்ந்த கமேலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு நாடுகளிலும் தங்கள் நாட்டில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் அதிக அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் பல நாடுகளில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தங்கள் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என பெற்றோர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது சில நாடுகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாசி வழியாக தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனையில் இதுவரை உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தவித பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ரஷ்ய விஞ்ஞானி கமலேயா இன்ஸ்டிடியூட்டின் தலைவரான அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் அவர்கள் குழந்தைகளுக்கு நாசியில் தடுப்பூசி போட்டதில் இதுவரை எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal