இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80,834 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,303 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,94,39,989 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 80,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 3,498 ஆயிரம் குறைவாக உள்ளது.
- கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,94,39,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,303 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,70,384 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,32,062 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,80,43,446 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,26,159 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 25,31,95,048 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.