இன்று ஐ.நா.வின் 8-வது பொதுச்செயலாளரான பான் கி மூன் பிறந்தநாள்….!

  • இன்று ஐ.நா.வின் 8-வது பொதுச்செயலாளரான பான் கி மூன் பிறந்தநாள்.

ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச்செயலாளராக இருந்த, பான் கி மூன் ஜூன் 13-ஆம் தேதி 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.இவர்,  சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் 1970-ஆம் ஆண்டு இளநிலை பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் 1985-ம் ஆண்டு, முதுகலை பட்டம் பெற்றார்.

இவர் ஏழாவது பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் ஐ.நா- வின் பொது செயலாளர் பொறுப்பை ஏற்றார். பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்பதாக தென்கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.  இவர், கொரிய வெளியுறவுத்துறையில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 8-வது பொதுச் செயலாளராக பதவி வகித்த, இவரது பதவிக்காலம் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவு பெற்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.