ஜூன் 21-ஆம் தேதி வரை கோவாவில் ஊரடங்கு நீட்டிப்பு!

ஜூன் 21-ஆம் தேதி வரை கோவாவில் ஊரடங்கு நீட்டிப்பு!

  • கொரோனா பரவல் காரணமாக கோவாவில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஊரடங்கு வருகிற ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவளின் தாக்கம் கடந்த சில தினங்களாக குறைய தொடங்கி இருந்தாலும், தினமும் புதிய தொற்றுகள் ஏற்படு கொண்டுதானிருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த சில மாநிலங்களில் ஊரடங்குகளின் கடுமையான கட்டுப்பாடுகளை தற்பொழுது அம்மாநில அரசுகள் தளர்த்தி வருகின்றன. இந்நிலையில் கோவாவில் ஏற்கனவே ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கோவாவில் கொரோனாவின் பாதிப்பு முழுமையாக குறையாத காரணத்தால், வருகிற 21-ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை கடைகள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பிரம்மோத் சாவந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube