#BREAKING : பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் – அமைச்சர் சேகர்பாபு

  • அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும்.

சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த கோயிகளில் அர்ச்சகர் பற்றாகுறை உள்ளதோ அங்கு தேவையான அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கும் அதற்கான பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 30 கோயில் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், திருச்சி ஜீயர் நியமனத்திலும் தொடர்ந்து எந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததோ, அதே நடைமுறையை பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.