+2 தேர்வு ரத்து அறிவிப்பால் பயனில்லை- எம்.பி சு.வெங்கடேசன்

நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர், கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள #Covid19 சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது. #NEET என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan