இப்போ எல்லாம் ஓல்ட்., நாங்கள் டெஸ்லா கார் போன்று புதிய கார், புதிய டிரைவருடன் வருவோம் – அர்ஜூன மூர்த்தி அதிரடி

இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட், அம்பாசிடர் கார்கள் போன்றவை என்று புதிய கட்சி தொடங்கவுள்ள அர்ஜூன மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

ரஜினி புதிதாக தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனன் மூர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னை அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன் என்றும் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். விரைவில் மாற்றத்தின் சேவகனாக நான் உங்கள் முன் என்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அர்ஜுனன் மூர்த்தி தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சி தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மனிதர்களை மனிதராக பார்க்கும் அரசை என்னைக்கு நாம் அமைக்கிறோமோ அன்றைக்கு தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும். தற்போது நாம் உண்மையான சுதந்திரத்தில் இல்லை. நல்ல சுதந்திரம் வேண்டும். அப்போ நமக்கு ஒரு நல்ல அமைப்பு, நேர்மை, நாணயம் உள்ள மனிதர்களை சீர்நோக்கி பார்க்க வேண்டும். அவர்களுக்கு உதவிகளை செய்து, கண்டிப்பாக 2021 தேர்தலில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு மட்டுமில்லாமல், இந்தியாவுக்கே தமிழகம் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். அதனால், நீங்கள் அதற்கு துணை இருக்க வேண்டும் என்றுதான் என்னுடைய வேண்டுதல். நிச்சியமாக ஒரு மாற்று கருத்து தேவையாக இருக்கு. ஒரு மரம் தோப்பாகாது, என்னால் மட்டும் ஒரு அரசில் அமைப்பு பண்ணமுடியாது. அதற்கான நண்பர்களை சேர்த்து, ஒரு அரசியல் கட்சி நிறுவனம் என்பதில் எனக்கு மிகப்பெரிய ஆர்வமும், ஆசையும் இருப்பதால், வெகு விரைவில் உங்கள் அனைவரையும் அழைத்து, ஒரு சிறப்பான அரசியல் கட்சியை தொடங்குவேன். இன்னும் ஒருவாரத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறேன். எனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் முற்றிலும் பாஜகவுக்கு மாற்றாகவே இருக்கும். ரஜினியின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ என் கட்சியில் பயன்படுத்த மாட்டேன். ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணைந்து பணியாற்றலாம்’என்றும் அழைப்பு விடுத்தார். இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட் மற்றும் அம்பாசிடர் கார்கள் போன்றவை. டிரைவர்கள் மட்டுமே மாறுவார்களே தவிர கார்கள் அப்படியே தான் இருக்கும். நாங்கள் டெஸ்லா கார் போன்று புதிய கார், புதிய டிரைவருடன் தமிழக அரசியலில் வலம் வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்