செல்போன் சிக்னல் இல்லை, போதிய இணைய வசதி இல்லை – கமல்ஹாசன் ட்வீட்
தமிழகத்தில் பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை. கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில் (Lockdown) ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி எனும் அடிப்படை உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எமது ‘டிஜிட்டல் இல்லங்கள்’ திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில்(Lockdown) ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி எனும் அடிப்படை உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எமது ‘டிஜிட்டல் இல்லங்கள்’ திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன். #இனி_நாம் (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) December 31, 2020