வெற்றி கனியை பறித்த பைடன்! ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 20ஆம் தேதி பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர்-3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ  பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் பும் போட்டியிட்டனர். இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களையும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை  இடங்களையும் பெற்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளர் குறைந்தது 270 தேர்தல் சபை உறுப்பினர்களை பெறுவது அவசியம். இந்நிலையில் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்ப், தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அவரது அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பைடன் அதிபராக பதவியேற்பது சட்ட ரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.