குறைந்த விலையில் விற்கப்பட்ட சோனி டிவி – வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குறைந்த விலையில் விற்கப்பட்ட போலி சோனி டிவியை வாங்கி வீட்டுக்கு வந்து போட்டு பார்த்து ஆன் ஆகாததால், காவல் நிலையத்தில் புகார்.

சாதாரணமாக வீட்டில் வாங்க கூடிய வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு ஒவ்வொரு பிராண்டட் நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனங்களை நம்பி நாம் உடனடியாக பொருள் வாங்கி விடுவோம். அதுபோல  மக்கள் மதிப்பு பெற்ற நிறுவனம் தான் சோனி. திருச்சியில் குறைந்த விலைக்கு சோனி டிவி தருவதாக திருச்சியில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 9 ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் டிவியை வாங்கி வீட்டிற்கு வந்துள்ளார் அல்க்கர். ஆனால் அதற்கு பில் கொடுக்கப்படவில்லை என கூறுகிறார். அதன் பின் டிவி ஓபன் செய்து ஆன் செய்து பார்த்த பொழுது டிவி செயல்படவே இல்லை, டிவி செயல்படவில்லை என எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது சோனி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் சென்று பழுது பார்த்துக் கொள்ளும்படி கூறி உள்ளனர்.

எனவே அவரும்  கால் செய்து டிவி நம்பரை சொல்லிக் கேட்டபோது அது தங்களுடைய நிறுவனத்தின் டிவி அல்ல எனவும் அதில் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் சோனி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் தலைமையில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அப்பொழுது சோனி எனும் பெயரில் அவர் வாங்கிய கடையில் பல டிவிகள் போலி ஸ்டிக்கருடன் ஓட்டி விற்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 153 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு வேலை பார்த்து வந்த நிஜாமுதீன், முகமது பைசல் சரவணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தற்போது அந்த கடைக்கு சோனி நிறுவன அதிகாரிகள் நேரடியாக வந்து பார்த்துச் சான்று அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
Rebekal

Leave a Comment