தித்திக்கும் சுவைகொண்ட திராட்சையில் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா!

மிகவும் இனிப்பாகவும், பார்ப்பதற்கு பல வண்ணங்களில் அழகாகவும் வித்தியாச வித்தியாசாமான சுவையுடனும் காணப்படக்கூடிய திராட்சை பழத்தில் பல்வேறு மருத்துவ நன்மைகளும் பயன்களும் உள்ளது. அவற்றை பார்க்கலாம் வாருங்கள். 

திராட்சையின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு திராட்சை பழம் நண்பன் என்றே சொல்லலாம். ஆனால், உலர் திராட்சை தான் மிகவும் நல்லது. கருப்பு நிற உளர் திராட்சையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி குணமாகும். இது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. மலச்சிக்கலை தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்க கூடிய இந்த திராட்சையில் புற்றுநோயை குணமாக்கும் ஆற்றலும் அதிகம் உள்ளது.

இதில் ஆண்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளது. இது புற்றுநோய்களுக்கு எதிராக போராடி உடலை பாதுகாக்கிறது. இது இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலை குறைத்து உடலை சீரமைக்கும் பணியை நன்றாக செய்கிறது. லிவோலியிக் அமிலம் இதில் அதிகம் உள்ளதால் இது முடியை வலுப்படுத்த உதவுகிறது.

author avatar
Rebekal