ஐப்பசி பௌர்ணமி: இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை கோவில் செல்ல அனுமதி!

ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை கோவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதிலும் வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தான் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் கூட்டமாக செல்லக்கூடிய இடங்களுக்கு இன்னும் முழுவதுமாக அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தற்போதுவரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் வருகிற ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. மேலும் சதுரகிரி மலையில் தங்குவதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
author avatar
Rebekal