#BREAKING: பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்-முதலமைச்சர் அறிவிப்பு

ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு 21-வயது நிரப்பும்போது  ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி 17-ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.இன்றும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது முதலமைச்சர் பழனிசாமி , ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு 21-வயது நிரப்பும்போது  ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளின் சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவி தொகை  அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.