பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது உத்தர பிரதேச அரசு.!

  • அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ராமர் கோவில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தன்னிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே அயோத்தி வழக்கில் டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும்,  அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது என குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தன்னிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 3 இடங்களில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பியதில், இந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அயோத்திக்கு வரும் பக்தர்கள் நகருக்கு 15 கிலோமீட்டர் முன்னதாகவே ராமருக்கு வணக்க வழிபாடுகளை செய்வார்கள். அந்த எல்லைக்கு அப்பால் மட்டுமே பள்ளிவாசலுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்