ஆய்வில் அதிர்ச்சி தகவல் !இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாம் ….

சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியா முழுவதும் நீரிழிவு நோய் தொடர்பாக 6% பேர் பாதிப்படைந்துள்ளனர் என அதிர்ச்சியான முடிவு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பொதுசுகாதார பள்ளி ஆய்வு நடத்தியுள்ளது. குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைத் தவிர, 27 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக நடத்திய ஆய்வின் முடிவில், இந்தியாவில் சுமார் 6 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆண்களில் 6.5 சதவீதம் பேரும், பெண்களில் 6.1 சதவீதம் பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல், 24.5 சதவீத ஆண்கள் உயர் ரத்த அழுத்ததாலும், பெண்களில் 20 சதவீதம் பேர் இதேநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வாழும் நடுத்தர வயதினரும், ஏழைகளும் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment