தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் -திருவள்ளுவர் விவகாரத்தில் பாஜகவை தாக்கிய சிதம்பரம்

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு விபூதி மற்றும் காவி உடை அணிவித்து புகைப்படம் பதிவிடப்பட்டது.  இந்த விவகாரம் தமிழகத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.


இந்த நிலையில் இது குறித்து சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தனது குடும்பத்தினர் வாயிலாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.


நாணாமை நாடாமை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்” -குறள் 833 என்ற ககுறளை பதிவிட்டுள்ளார்.மேலும்  பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சிதம்பரம் அவர்கள் பதிவிட்ட ட்விட்டர் பதிவில்,சிறிய பிழை உள்ளது.அதாவது அவர் பதிவிட்ட திருக்குறளில்  “நாரின்மை” என்ற வார்த்தை பதிவிடவில்லை.
இதோ அந்த குறள்,
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில் …
என்பது ஆகும் .