உச்ச நீதிமன்றம் அதிரடி !திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது இனி கட்டாயம் இல்லை….

நாடு முழுவதும் திரையரங்குகளில், படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமென்றும், அப்போது திரையில் தேசியக்கொடி தோன்ற வேண்டும் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இயலாதவர்கள் எழுந்து நிற்க முடியுமா என்று கேட்கப்பட்டதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, குழு ஒன்றை உடனடியாக அமைத்து, விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து, விதிகளை உருவாக்க வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் தேவை என்றும், எனவே, உத்தரவை மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment