தூத்துக்குடியில் காவல்துறையைக் கண்டித்து 19ம் தேதி வியாபாரிகள் கடையடைப்பு

நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் காவல்துறையினர் வியாபாரிகளிடம் செல்போன்களை பறித்து கொலை, கொள்ளை குற்றவாளிகளைப்போல நடத்துவது, வியாபாரிகளை ஆபாசமாக திட்டி தாக்குவது போன்றவற்றை கண்டித்து வருகிற 19ம் தேதி தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தர்மர் ராஜா கூறுகையில், தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலான போலீசார், வியாபாரிகளிடம் அத்துமீறி நடந்து செல்போன்களை பறிப்பது, ஆபாசமாக திட்டி வியாரிகளை தாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநில தலைவர் வெள்ளியனிடம் புகார் அளித்தோம்.

அதனடிப்படையில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தூத்துக்குடி போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், வருகிற 19ம் தேதி காவல்துறையினரைக் கண்டித்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிர போரட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதையடுத்து வருகிற 19ம் தேதி தூத்துக்குடியில் முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இதற்கு பொதுமக்களும், வணிகர்களும் முழு ஆதரவு அளித்து போராட்டம் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment