“நீட் தேர்வு விலக்கு வெறும் கண்துடைப்பு” – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல், ஆட்சியைத் தக்க வைப்பதிலேயே அரசு முன்ப்பாக உள்ளது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கிடைக்கும் என்பது வெறும் கண்துடைப்பு என்றும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது தொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசின் சட்ட முன் வடிவு இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம், தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்தார். இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கிடைக்கும் என்பது வெறும் கண்துடைப்பு என அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்திருப்பது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல் எனவும் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல், ஆட்சியைத் தக்க வைப்பதிலேயே அரசு முனைப்பாக உள்ளது என்றும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

Leave a Comment