100 கோடியை தாண்டிய தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை! மொத்த வசூல் விவரம் இதோ!

தல அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த அப்படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனிகபூர் தயாரித்து இருந்தார். பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை பெற்று வருகிறது. சென்னையில் முதல் 11 நாளில் 9.70 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 70 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக உலகம் முழுவதும் 100 கோடி வசூலை இப்படம் தாண்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.