மானியமில்லாத சமையல் எரிவாயு விலை குறைந்தது! பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாடு முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எண்ணேய் நிறுவனங்களும் சமையல் எரிவாயுவின் விலையையும் மாதந்தோறும் மாற்றி வருகிறது.

இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம், சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மாநியமில்லாத சமையல் எரிவாயுவின் விலை ரூ.62.50 வரை குறைக்கப்பட்டு, 590 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வேனும் என IOC அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை 2019-ல் மானியமற்ற சிலிண்டரின் விலை ரூ.100.50 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது, 62.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரன்டு மாதங்களில் மானியமற்ற சிலிண்டரின் விலை ரூ.163 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.