அனல் பறக்கும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்: ஆர்ச்சருக்கு காயம் !

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அனல் பறக்கும் ஆஷஸ் தொடர் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தில் இருந்து மீண்டு  வந்ததால் மீண்டும் அணியில்  சேர்க்கப்பட்டார்.ஆனால் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்ர் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவர் இன்று நடைபெறும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு முதல் முறையாக விளையாட உள்ளனர்.

author avatar
murugan