வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1768 – இந்தியாவின் வடக்கே இமயமலைப் பிரதேசத்தில் நேபாளம் என்ற புதிய நாடு உருவானது..!

வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1768 – இந்தியாவின் வடக்கே இமயமலைப் பிரதேசத்தில் நேபாளம் என்ற புதிய நாடு உருவானது. பிருத்வி நாராயண் ஷா எனப்படும் கூர்க்கா வமிச அரசர் நேப்பாள நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றார். இந்த நேப்பாள நாடு சமீப காலம் வரை ஒரு இந்து நாடாக இருந்துவந்தது. பாரதீய ஜனதா கட்சியின் எஜமானர்களாகவுள்ள பஜ்ரங் தள் போன்ற இந்துத்வா பரிவாரங்கள் நேபாளம் உள்ளிட்ட அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று வாய்க் கொழுப்புடன் வீர வசனம் பேசியதனால் இந்தியாவில் அக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற வுடனேயே நேப்பாள மக்கள் உஷார் ஆகிவிட்டார்கள். நேப்பாளம் ஒரு இந்து நாடல்ல என்று பிரகடனம் செய்தார்கள். இதெற்கென அந்நாட்டின் அரசியலமைப்பையே திருத்தினர். இந்தியர்களையே அவர்கள் சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தின்பொதுகூட அவர்கள் உதவி செய்யவந்த இந்தியர்களை விரைந்து நேப்பாளத்தை விட்டு காலி செய்யுமாறு எச்சரித்தனர். பா. ஜ. கட்சியின் ஆதரவு கட்சிகள் என்று அவர்கள் கருதிய கட்சிகள் எல்லாம் நேப்பாளத்தின் சமீபத்திய பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டன. இந்திய தொலைக்காட்சி சேனல்கள் நேப்பாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. நேபாளம் தற்போது சீனாவுடன் மிகவும் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் வெளியுறவுக் கொள்கையின் லட்சணம் இவ்வாறாகவுள்ளது.

source: dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment